வெப்பநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்பநிலை சுட்டெண் ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இதன் தாக்கம் சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்தநிலையில், பொதுமக்கள் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வு எடுக்குமாறும் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

வெப்பத்தினால் ஏற்படும் தாக்கத்தினை குறைத்துக்கொள்ளகூடிய வகையில் இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்