பேருந்துகள், ரயில்கள் இன்று முதல் வழமைக்கு

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் ரயில்கள் இன்று திங்கட்கிழமை முதல் வழமை போல இயங்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 4,500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் புத்தாண்டுக்கான விசேட போக்குவரத்து திட்டம் நாளை செவ்வாய்கிழமை வரை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்