புலியை கொஞ்சிய பெண்: காத்திருந்த அதிர்ச்சி

பலர் வீட்டில் கால்நடைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலான மக்கள் நாய்களை செல்லப்பிராணிகளாக விரும்புகிறார்கள் இருப்பினும், ஆபத்தான விலங்குகளை வளர்ப்பதில் அல்லது அவற்றுடன் புகைப்படம் எடுப்பதில் சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆபத்தான விலங்குகளை அணுகும் போது ஒவ்வொரு கணமும் கவனமாக இருக்க வேண்டும். காட்டு விலங்குகள் மூர்க்கமான இயல்புடையது, எனவே அது எப்போது வேண்டுமானாலும் பயமுறுத்தலாம். அது வேடிக்கையாகவும் சில சமயம் தண்டனையாகவும் மாறும்.

இந்த வீடியோவில், புலிக்கு அருகில் பெண் நிற்பதைக் காணலாம். அது புலியல்ல வளர்ப்பு நாய், பூனை என்பது போல மிக வசதியாக அதன் அருகில் நிற்கிறார். அந்தப் பெண் புலியின் தலையில் கைவைத்து அரவணைத்துக் கொண்டிருந்தார், அடுத்த கணம் அந்தப் பெண்ணின் அன்பு புலிக்கு பிடிக்காமல் அவர் கையைப் பிடித்து இழுத்து வாயில் கவ்வுகிறது. அந்தப் பெண் சில தந்திரங்கள் மூலம் அதிலிருந்து விடுபட முயற்சிக்கிறார், ஆனால் புலி அவரை விடவேயில்லை. கை, கால், இடுப்பு என மாறி மாறி அந்தப் பெண்ணை கவ்வுகிறது.

எனினும் அதிஷ்டவசமாக அந்த பெணுக்கு ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்