வீதியோர வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட வீதியோர வியாபார அனுமதி இன்று செவ்வாய் கிழமையுடன் நிறைவடைவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட விசேட அனுமதிக்காக அவர்களிடம் இருந்து எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தொடர்ந்தும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் எஸ்.வீரகோன் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்