புதிய பெருந்தொற்று எச்சரிக்கும் சர்வதேச ஆய்வு

கடந்த ஆண்டுகளில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலானது மனித குலத்திற்கு வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் இரண்டு ஆண்டுகாலம் ஒட்டுமொத்த உலகத்தையே முடங்கச் செய்த இந்த பெருந்தொற்று ஒட்டுமொத்த சுகாதார அமைப்பிற்கே பெரும் சவாலாக அமைந்தது.

இந்நிலையில், எதிர்கால முன்னெச்சரிக்கை கருதி பெருந்தொற்று பரவல் குறித்து லண்டனை சேர்ந்த Airfinity Ltd என்ற நிறுவனம் ஆய்வு செய்து முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த தசாப்தத்தில் கோவிட்-19 போன்ற கொடிய தொற்றுநோய் ஏற்படுவதற்கு 27.5% வாய்ப்பு உள்ளது, ஏனெனில் சமீப காலமாக வைரஸ்கள் அடிக்கடி வெளிவருகின்றன. விரைவான முறையில் தடுப்பூசிகள் பயன்படுத்துவதன் மூலம் பாதிப்புகளை குறைத்து இறப்புகளைக் குறைப்பதற்கான வாய்ப்புள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம், சர்வதேச பயணத்தின் வளர்ச்சி, அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் ஜூனோடிக் நோய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவை ஆபத்திற்கு பங்களிக்கின்றன. ஆனால் புதிய நோய்க்கிருமி பரவல் கண்டுபிடிக்கப்பட்ட 100 நாட்களுக்குப் பிறகு பயனுள்ள தடுப்பூசிகள் வெளியிடப்பட்டால், நிறுவனத்தின் மாடலிங் படி, கொடிய தொற்றுநோய் 8.1% ஆக குறைகிறது.

எதிர்காலத்தில் அபாயம் மிக்க MERS மற்றும் ஸிகா போன்ற வைரஸ்களுக்கு தடுப்பூசிகளோ முறையான மருத்துவமோ இல்லை. அதேபோல, தற்போதைய கண்காணிப்பு முறைகள் போதுமானதாக இல்லை. எனவே, தயார் நிலைக்கு வர வேண்டிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்