பிரபல திரைப்பட இயக்குனரை தாக்கிய சம்பவம் : 5 பேர் கைது

பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனரான காமினி பிரியந்தவை கடத்திச் சென்று உடல்ரீதியாக தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காமினி பிரியந்த வெலிமடை நகரில் சென்று கொண்டிருந்த கொண்டிருந்த போது வேனில் வந்த நான்கு பேர் அவரை கடத்திச் சென்று தாக்கியுள்ளனர், அதன்பின் அவரை தாக்கி சாலையோரம் விட்டு சென்றனர்.

கடத்தலின் போது பயன்படுத்தப்பட்ட சந்தேக நபர்களின் வேன் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில், நாடகம் தயாரிப்பது தொடர்பாக வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடத்தல் மற்றும் தாக்குதலுக்கு உள்ளானது எனத் தெரியவந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்