
பிரபலமான வாகன வகைகளை மீண்டும் இறக்குமதி செய்ய முடியாது
நாட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் – இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு உரிய நிலையில் உள்ள வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஜப்பான் – இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
டொயோட்டா அக்வா, டொயோட்டா எக்ஸ்சியோ, டொயோட்டா பிரீமியோ, டொயோட்டா பியஸ் மற்றும் டொயோட்டா எலியோன், டொயோட்டா விட்ஸ் ஆகிய வாகனங்களை இந்த முறைமையின் கீழ் இறக்குமதி செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வகை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ள போதிலும் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனும் நம்பிக்கையில் இறக்குமதியாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்