பியர் போத்தல்கள் எப்போதும் பச்சை, பழுப்பு நிறமாக இருப்பது ஏன்?

மது அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மது அருந்துதல் பல்வேறு நாட்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். ஆனால் மக்கள் இன்னும் மதுவை அருந்துகிறார்கள். முழுமையாக மது விலக்கு என்பது எங்கும் அமல்படுத்த முடிவதில்லை.

பியர் போத்தல்கள் எப்போதும் பச்சை, பழுப்பு நிறமாக இருப்பது ஏன்?

மதுவில் பலவகைகள் உள்ளன. அதில் அதிகம் பருகப்படுவது பியர். பியர் பானத்தையும் பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவர்கள் அனைவரிடமும் இரண்டு வண்ணங்களில் மட்டுமே பியர் போத்தல்கள் தயாரிக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? மற்றவை வேறு வேறு வரும்போது ஏன் பியர் போத்தல்கள் மட்டும் ஏன் இந்த இரண்டு நிறங்களில் உள்ளன?

பல ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் பியர் போத்தல்கள் தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அங்கு வெளிப்படையான பாட்டில்களில் பியர் பரிமாறப்பட்டது. வெளிப்படையான பாட்டில்கள் சூரிய ஒளியில் படும் போது, ​​புற ஊதா கதிர்கள் உட்புகுந்து பியர் விரைவாக வேதியல் மாற்றம் அடைவதை கவனித்தனர்.

பியர் போத்தல்கள் எப்போதும் பச்சை, பழுப்பு நிறமாக இருப்பது ஏன்?

இதனால் சுவையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பியர் குடித்த பிறகு பலருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால், அப்போதும் பாட்டிலுக்குள் பியரை எப்படி சரியான நிலையில் வைத்திருப்பது என்று ஆராய்ச்சி தொடங்கியது. அப்போது ஒரு புதிய யோசனை கண்டுபிடிக்கப்பட்டது.

சூரியக் கதிர்களில் இருந்து பியரை பாதுகாக்க சன்கிளாஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து கண்களைப் பாதுகாக்க பொதுவாக கண்ணாடிகள் பல்வேறு நிழல்களில் கிடைக்கின்றன. எனவே அவ்வகையில் ஒளியை சிதறவைக்கும் நிறங்களில் பீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.

பியர் போத்தல்கள் எப்போதும் பச்சை, பழுப்பு நிறமாக இருப்பது ஏன்?

அப்படி தான் பழுப்பு நிற பாட்டில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பியரை கெரி பாட்டிலில் வைத்த பிறகு, சூரிய ஒளி திரவ பியரை உள்ளே ஊடுருவ முடியாமல் இருப்பது தெரிகிறது. இதன் விளைவாக, பியர் நீண்ட நேரம் நன்றாக இருந்தது. வீணாகவில்லை இது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பியர் பாட்டில்கள் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது.

பியர் போத்தல்கள் எப்போதும் பச்சை, பழுப்பு நிறமாக இருப்பது ஏன்?

இரண்டாம் உலகப் போரின் போது, ​​அதிகப்படியான பழுப்பு நிற பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், நிறுவனங்கள் பியர் போத்தல்களை ஆர்டர் செய்தாலும், அவற்றைப் பெற முடியாத அளவுக்கு தேவை அதிகமாக இருந்தது. இதன் விளைவாக, அவர்கள் பச்சை பாட்டில்களில் பியர் விற்கத் தொடங்கினர்.

அதன் பின்னர் தான் இந்த இரண்டு நிறங்களில் பியர் விற்கும் பழக்கம் தொடங்கியது. இன்று வரை இந்த இரண்டு நிறங்களில் தான் பிரதான பியர் போத்தல்கள் விற்கப்படுகின்றன. வெளிப்படையான பாட்டில்களிலும் பியர் விற்கப்பட்டு தான் வருகிறது. அனால் அதிக எண்ணிக்கை என்று பார்த்தால் பச்சைஇ பழுப்பு தான் இருக்கும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்