பால் மா விலையை மேலும் குறைக்க இணக்கம்

பால்மாவின் விலைகளை எதிர்வரும் நாட்களில் மேலும் குறைப்பதற்கு பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த இணக்கத்தை வெளிப்படுத்தப்பட்டதாகவும் இதுதொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக பேஸ்புக் பதிவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்