பாதுகாப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய தாயார்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதையடுத்து வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்யத் தயாராக இருப்பதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கப்பல்களில் இருந்து இறக்குவதற்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இருப்பதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172