பாதீட்டில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

இம் முறை பாதீட்டில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் எதிர்கால திட்டமிடல் இல்லாமல் உள்ளமை கவலையளிக்கிறது. அவ்வாறான திட்டமிடல்கள் மூலமே முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்