பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு!
பாண் உட்பட பல பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ஏனைய பேக்கரி பொருட்களின் விலையும் 10 ரூபாவால் குறைக்கப்படும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்