பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி அவசியம்
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்று வெள்ளிக்கிழமை முன்மொழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சிறுவர்களுக்கு பாலியல் பற்றிய சரியான விளக்கம் இன்மையினால் அவர்கள் பல்வேறு பாலியல் இன்னல்களுக்க முகங்கொடுக்கின்றனர்.
சில பாடசாலை மாணவர்களுக்கு சமூக நோய் என்றால் என்ன என்று தெரியாது. இந்த நோய்களைப் பற்றி அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். அத்தோடு இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் எனவும் டயனா கமகே கோரியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்