பாகிஸ்தான் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு: 13 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் கட்டடம் இடிந்து விழுந்து 13 பேர் பலியாகியுள்ளனர்.

இதன் போது அந்தக் கட்டடத்தின் வழியாக சென்ற ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த 50 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் என்று அந்நாட்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட மின்கசிவினால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்