பாகிஸ்தானுக்கு யானைகள்? இலங்கை அரசு மறுப்பு

பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை அன்பளிப்பாக வழங்கப்போவதாக வெளியான செய்தியை இலங்கை மறுத்துள்ளது.

பாகிஸ்தானின் விலங்கியல் பூங்காவில் ஆபிரிக்க யானையான நூர் ஜெஹான் உயிரிழந்ததையடுத்தே, கராச்சி மற்றும் லாகூர் விலங்கியல் பூங்காக்களுக்கு இரண்டு யானைகள் அனுப்பப்படவுள்ளதாக, செய்திகள் வெளியாகின.

எனினும், அவ்வாறான எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஊடகங்களில் வெளியான செய்திகளை நிராகரித்து ட்விட்டர் பதிவொன்றை செய்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்