பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன

அத்துடன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தே கநபரும் அமெரிக்க பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக அமெரிக்காவின் நெவாடா பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்