பனிப்புயலால் அமெரிக்கர்கள் அவதி
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக 6 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கென்டக்கி, விர்ஜினியா, மேற்கு விர்ஜினியா, கன்சாஸ், அர்கன்சாஸ் மற்றும் மிசௌரி ஆகிய மாநிலங்கள் பனிப்புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதிகளுக்கு யாரும் பயணம் செய்யவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பனிப்புயல் காரணமாக 1,500க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்