பண்டிகைக் காலத்தின் பின்னரும் பாதுகாப்பு தீவிரம்
பண்டிகைக் காலத்தின் பின்னரும் பாதுகாப்பு தீவிரம்
பண்டிகைக் காலத்தின் பின்னரும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸாரும், புலனாய்வு பிரிவினரும் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்ப்பதுடன், அவ்வாறு மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்வதற்காக, பொலிஸார் தொடர்ந்தும் சோதனையில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வீதி விதிமுறைகளை உரியவாறு பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்