பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்: நியூசிலாந்துக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை

பசுபிக் பெருங்கடல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ளது வனுவாட்டு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டுக்கு 54 கிலோமீற்றர் தொலைவில் ரிக்டர் அளவில் 7.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வனுவாட்டு தீவைச் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்