பசறை – எக்கிரிய பிரதான வீதி வழமைக்கு
-பதுளை நிருபர்-
பசறையில் இருந்து மடுல்சீமை ஊடாக குருவிகொல்ல பிட்டமாறுவ மற்றும் மெட்டிக்காத்தன்ன எக்கிரிய செல்லும் பிரதான வீதி வழமைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பசறையில் இருந்து மடூல்சீமை ஊடாக மெட்டிக்காத்தன்ன, எக்கிரிய மற்றும் எலமான், ராகல, றோபேரி, பிட்டமாறுவ வரை செல்லும் பிரதான வீதியில் மடூல்சீமை குருவிகல்ல 25 ஆவது கிலோ மீட்டர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பெய்த மழையின் காரணமாக மாலை பாரிய மண்மேடு சரிந்து வீதியில் விழுந்தமையினால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை காலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் குறித்த மண்மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டு தற்போது குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்