நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் உணவு வகைகள்!

இன்றைய காலகட்டத்தில் என்றும் இளைமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் ஆசையும் தான். அதற்கு என்ன சாப்பிட வேண்டும்? எது தேவை என்று யோசித்துக்கொண்டு இருப்போம். அதற்கான டிப்ஸ் தான் சொல்ல இருக்கிறோம். உணவில் ஆண்டி ஆக்சிடண்டுகள் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கை வழங்கும்.

ஆரோக்கியமான உணவு

ஃப்ரீ ரேடிக்கல்கள் என்பது சுற்றுச்சூழல் மற்றும் பிற அழுத்தங்களுக்கு எதிர்வினையாக உடல் உற்பத்தி செய்யும் நிலையற்ற மூலக்கூறுகள் ஆகும். அவை வீக்கம் மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எடுக்கும்போது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதம் குறைக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை பற்றி பார்க்கலாம்.

Healthy Foods

மாதுளை: ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழம் என்றால் மாதுளை தான். இதை ஜூஸாக போடு சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடும் போது அதிக நன்மைகள் கிடைக்குமாம். அதோடு மாதுளை இதயத்திற்கு ஆரோக்கியம் தரும்மற்றும் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் இருக்கவும் உதவுமாம்.

Healthy food

ராஜ்மா பீன்ஸ்: பீன்ஸ் வகைகள் என்று பார்த்தால் நிறைய உள்ளன. அதில் குறிப்பாக சிறுநீரக வடிவத்தில் இருக்கும் சிவப்பு நிற ராஜ்மா பீன்ஸில் கொழுப்பு குறைவாக உள்ளது. ஆனால் புரதம், நார்ச்சத்து, இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அதிகம். இது உடலின் செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

Healthy Food

ப்ரோக்கோலி: ப்ரோக்கோலியில் வைட்டமின்கள்இ தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் சி மற்றும் லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகளை மறுசுழற்சி செய்ய உதவும் ஃபிளாவனாய்டு எனும் தனித்துவமான சத்தும் இதில் உள்ளன. ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட அவை ஒன்றாக வேலை செய்கின்றன.

Healthy Food

டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகளிலிருந்து பல நன்மைகளை நமது உடல் பெறுகின்றன. அவை உடலில் ஆக்ஸிஜனேற்றம் அதிகரிக்க காரணமாகின்றன. டார்க் சாக்லேட் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது.

Healthy Food

ஊதா முட்டைக்கோஸ் : சாதாரண முட்டைகோஸை விட ஊதா முட்டைக்கோஸில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஃபோலேட் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளது. இதய நோய், புற்றுநோய் மற்றும் பார்வை இழப்பு போற்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றியான வைட்டமின் -சியும் இந்த கோஸில் அதிகம் உள்ளது. இதை பொரியலாகவோ, சாலட் போலவோ சாப்பிடலாம்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்