நுவரெலியாவில் மலர் கண்காட்சி ஆரம்பம்

நுவரெலியா வசந்த காலத்தையொட்டி நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவினால் வருடம் தோறும் வருகை தருகின்ற உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக இடம்பெறும் மலர் கண்காட்சி இன்று திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம்முறை விக்டோரியா பூங்கா நவீன மயப்படுத்தப்பட்டு , புதிய அரியவகையான பூக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

நாளை செவ்வாய்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த மலர் கண்காட்சியில் அரச மற்றும் தனியார் பிரிவுகளிலிருந்து 150 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இம்மலர் கண்காட்சிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு, பணப்பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்