
நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
அநுராதபுரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாரவிட, தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
3 பாடசாலை மாணவர்கள் நேற்று காலை மெட்டியகனே மஹாவெவவில் நீராடச் சென்ற வேளையில் அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
பின்னர், மாணவர்களும் பிரதேசவாசிகளும் நீரில் மூழ்கிய மாணவனை மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் ஏற்கனவே மாணவர் உயிரிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்