களனி கங்கையில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்

களனி கங்கையில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்

கேகாலை யட்டியாந்தோட்டைப் பகுதியில், நபர் ஒருவர் களனி கங்கை நீரோட்டத்தில் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போயுள்ள குறித்த நபர் யட்டியாந்தோட்டை அத்தனகல பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

களனி பிரதேசத்தில் இருந்து யாத்திரைக்காக சென்று மீண்டும் தமது சொந்த இடத்திற்கு திரும்பியபோது இவ்வாறு நீரில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

காணாமல் போனவரை தேடும் பணிகளில், பொலிஸாரும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்