நிர்வாணமாக துவிச்சக்கரவண்டி செலுத்தி போராட்டம்!
கார்களுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக மெக்சிக்கோவில் நிர்வாணப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ நகரில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் போராட்டக்காரர்கள் நிர்வாணமாக துவிச்சக்கர வண்டிகளை செலுத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் பாவனையால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் விபத்துகளைக் கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களை வலியுறுத்தும் விதமாக இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்