நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது 3,738 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற குறித்த எரிவாயு கொள்கலனின் விலையில், இன்று நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்