நம்பி வந்த காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்!
இந்தியாவில் தமிழகத்தில் தன்னிடம் 2 மாதங்களாக பேசாமல் இருந்த காதலியை காதலன் வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா என்பவர் தனது கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்து வந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் தனது இளங்கலை படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்கள்.
அந்த மாணவி மேலும் படிக்க வேண்டும் என்று பி.எட் படிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த மாணவி, வெர்ஜின் ஜோஸ்வாவுடனான காதலை முறித்துக்கொண்டதுடன் 2 மாதங்களாக பேசாமல் இருந்துள்ளார்.
மேலும் தான் கொடுத்த கணனியை திருப்பி தருமாறு கேட்டுள்ளார், அதை கொடுப்பதற்காக சென்ற வெர்ஜின் ஜோஸ்வா உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று தனியாக குறித்த பெண்ணை அழைத்து சென்று உதயனூர்குளம் சாலையில் சென்றபோது திடீரென மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்த மாணவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
மயங்கி விழுந்த மாணவி இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து அவர் சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
எனினும், அங்கு வீதியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்