நண்பர்களுடன் உறங்கிக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்

சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் நண்பர்களுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது  சுவர் இடிந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானை ஒன்று சுவரை தாக்கியதில் சுவர் இடிந்து குறித்த இளைஞன் மீது விழுந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் சீகிரிய கிபிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த அவிந்த இஷான் சமரநாயக்க (19 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்

உயிரிழந்த இளைஞன் சிகிரியா பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி பெறுபவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியிள்ள நெல் வயலை சேதப்படுத்திய யானை பின்னர் இளைஞர்கள் உறங்கிக் கொண்டிருந்த வீட்டின் சுவரை தாக்கியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்