நண்பனை கொன்று வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றவர் கைது

அம்பலாங்கொடை பிரதேசத்தில் தனது நண்பரை கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படும் நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர் இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிரேவத்தையைச் சேர்ந்த (வயது – 43) ஆர்.ஜே.ரொஷான் குமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான நபரே, இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

தேவானந்த மற்றும் அம்பலாங்கொட தர்மாசோக வித்தியாலயங்கள் வருடாந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை மது அருந்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்