நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் சேஷு காலமானார்

நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் சேஷு மாரடைப்பால் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

மாரடைப்பு காரணமாக கடந்த 15ஆம் திகதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக லட்சுமி நாராயணன் சேஷு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று வீடு திரும்பிய நிலையில் காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

60 வதான இவர் பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.