தொற்று கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்துக்காக ஜப்பான் நிதி உதவி

இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தொற்று கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்காக ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது.

இதற்கமைய, ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு பிரதிநிதிகளால் 1.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆவண பத்திரத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்