தேசியமக்கள் சக்தியின் அலுவலகம் வவுனியாவில் திறந்து வைப்பு

-வவுனியா நிருபர்-

தேசியமக்கள் சக்தியின் வன்னிமாவட்ட தலைமை அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா கித்துள் வீதியில் குறித்த அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் விருந்தினர்களாக கலந்துகொண்ட கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலிசமரசிங்க  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரால் குறித்த அலுவலகம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியபிரமாணம் செய்து கொண்டவர்களுக்கு வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்