தெல்லிப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம்

-யாழ் நிருபர்-

தெல்லிப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

கடந்த இரு மாத காலமாக கந்தபுராண படன படிப்பானது இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் நிறைவுற்றது.

முருகப்பெருமானுக்கு அபிஷேகம், விசேட பூசைகளை தொடர்ந்து முருகப்பெருமான் இணை வள்ளி தெய்வானையும் விநாயகப்பெருமானும் இணைந்து திருவீதியுலா வந்தனர்.

சம காலத்தில் கந்தபுராண படன படிப்பானது பல ஆலயங்களில் மருவி வரும் நிலையி்ல் ஆண்டு தோறும் இவ் ஆலயத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம்

தெல்லிப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்