தீபற்றி எரிந்த வீட்டினுள் இருந்து சடலம் மீட்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து, வீட்டிற்குள் சென்ற போது குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்