திருஞானசம்பந்தர் சுவாமிகள் குருபூசை தின நிகழ்வு
-கிரான் நிருபர்-
தேவாரத்தை பாடியருளிய 63 சமயகுரவர்களில் ஒருவரான திருஞானசம்மந்தர் சுவாமிகளின் குரு பூஜை தின நிகழ்வுகளும் வழிபாடுகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணையடி திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களினால் கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்து இளைஞர் மாமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மு.கோகிலதாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச செயலக கலாச்சார உத்தியோகஸ்தர் நே.பிருந்தாவன் கலந்துகொண்டிருந்தார்
கிண்ணையடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து அறநெறி பாடசாலை மாணவர்களின் திருஞானசம்பந்தர் சுவாமியின் உருவப்படம் தாங்கி பேரணி ஆரம்பமாகி பாடசாலையை வந்தடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமானது.
கிரியைத்தொண்டின் மூலம் முக்தியை அடைந்த திருஞான சம்மந்தர் சுவாமிகள் பல தேவாரங்களை பாடிசென்றார்கள். இவ்வாறு தேவாரங்களை அருளிச் சென்ற திருஞானசம்மந்தர் சுவாமிகளின் குரு பூஜை தினத்தை முன்னிட்டு இந்து சமயத்தின் தொன்மை மிகு கருத்துக்களையும் தேவாரத்தின் மகிமையினையும் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் அறநெறி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
குரு பூஜை வழிபாடுகளில் திருஞானசம்மந்தர் சுவாமிகள் அருளிய தேவாரங்கள் பாடப்பட்டதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டு மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது .
நிகழ்வில் பிரதேசசெயலக கலாச்சார உத்தியோகத்தர், ஆலயகுருக்கள் மாற்றும் ஆலயங்களின் நிருவாகங்கள், கிண்ணையடி இளைஞர்கள் அறநெறி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்