திருகோணமலை கடலில் மிதக்கும் தார் போன்ற திரவ படலம்
திருகோணமலை கடலில் மிதக்கும் தார் போன்ற திரவ படலம்
திருகோணமலை உப்புவௌி தொடக்கம் நிலாவௌி வரையான கடற்பரப்பில் தார் போன்ற திரவ படலம் மிதப்பதன் காரணமாக நேற்று புதன்கிழமை முதல் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொழும்பிலுள்ள விசேட ஆய்வுக்கூட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் இப் பகுதியை அண்மித்த பகுதியில் பயணித்த கப்பலில் இருந்து கறுப்புத் துகள்கள் வெளியேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலை சோதனையிடப்பட்டு சில மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டது.
கப்பலில் இருந்து கழிவுகள் வெளியேறியிருந்தால்இ அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருகோணமலை மற்றும் அதனை சூழவுள்ள கடற்பரப்பை சுத்தப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்