தாயும், 11 மாத கைக்குழந்தையும் மாயம்

அங்குருவத்தோட்ட ஊராடுதாவ பிரதேசத்தில் இளம் தாயும் அவரது 11 மாத கைக்குழந்தையும் காணாமல் போயுள்ளனர்.

பெண்ணின் கணவர் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியேறி, அன்று மாலை 6.30 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பியபோது, ​​மனைவி மற்றும் மகள் இல்லாததால் பதற்றமடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இங்கிரிய பிரதேசத்தில் உள்ள மனைவியின் பெற்றோருடன் தொடர்பு கொண்டும் அவர்கள் வரவில்லை என தெரிவிக்ப்படுகின்றது.

மேலும், பொலிஸ் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி விசாரணை நடத்திய பொலிஸார், காணாமல் போன பெண்ணின் நெருங்கிய உறவினரின் முச்சக்கரவண்டியை தடுத்து நிறுத்தி அவரை விசாரணைக்காக பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்