தமிழ் – சிங்கள மீனவர்களுக்கிடையே பாரிய மோதல் : பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை – திருக்கடலூர் மற்றும் விஜிதபுர ஆகிய கிராமத்திலுள்ள தமிழ் – சிங்கள மீனவர்களுக்கு இடையே இன்று வியாழக்கிழமை பாரிய மோதலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடற்பரப்பில் சிறுபான்மை இனத்தவகள் மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து அப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், குறித்த ஆறு பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதன் போது விஜிதபுர பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்