தனியார் பேருந்துக்கு சேதத்தை ஏற்படுத்திய மூவர் கைது!

அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சேதத்தை ஏற்படுத்தியமை தொடர்பில்  பாடசாலை மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 14 முதல் 17 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே குறித்த தனியார் பேருந்துக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில்இ நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்