தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

62 வயதுடைய எல்லந்த களுகஹ பிட்டமாறுவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பேருந்து மீகாகியூல தொடக்கம் பிட்டமாறுவை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து ரோபேரி சிறி நாகாராம ஆலயத்திற்கு அருகில் குறித்த வயோதிப பெண் பேருந்தில் இருந்து இறங்குவதற்கு பேருந்தை நிறுத்தி, பெண் இறங்கியதும் மீண்டும் பேருந்து பயணிக்கும் போதே குறித்த பெண் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தின் சாரதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்