டீ.ஜே இசை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தடல்ல பகுதியில்  நேற்று சனிக்கிழமை இரவு டீஜே இசையை பார்த்துக் கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த (வயது – 36 ) நபர் என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகையின் காரணமாக இரண்டு சந்தேகநபர்கள் இணைந்து உயிரிழந்தவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்தவரின் உறவினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்