ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் : 242 பேர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 242 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுசு மற்றும் வாஜிமா நகரங்களில் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு இடையே சிக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முக்கியமான 72 மணி நேர அவகாசம் நேற்று (04) முடிவடைந்தது.

இருப்பினும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து 4,600 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஐ தாண்டியுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் மற்றும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

கடந்த 1ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டு 296 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கியது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்