ஜனாதிபதியினால் புதிய ஆலோசனை குழு நியமனம்

பலதரப்பு விவகாரம், கடன் நிலைப்படுத்தல் ஜனாதிபதி ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் பதில் தலைமை பொருளியலாளர் பேராசிரியர் சாந்த தேவராஜன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஷர்மினி குரே ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.