செயலிழந்த கதிரியக்க இயந்திரம் : மஹரகம அபேஷா வைத்தியசாலை
மஹரகமையில் அமைந்துள்ள அபேக்ஷா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக செயலிழந்துள்ள கதிரியக்க இயந்திரத்தை ஒரு வாரத்திற்குள் மீள பயன்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமென வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
குறித்த இயந்திரம் செயலிழந்தமையினால் பல நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்