சூடான் மோதல்: பலியானோர் எண்ணிக்கை 200

சூடான் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.

இந்த அதிகார மோதலில் 1800க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவ குழு போரை நிறுத்துவதற்கு இதுவரை உத்தியோகபூர்வமாக இணக்கம் தெரிவிக்கவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துணை இராணுவ குழுவினர் சூடானின் ஜனாதிபதி இல்லம், இராணுவத் தளபதியின் இல்லம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அந்த தகவலை சூடான் இராணும் உறுதியாக அறிவிக்கவில்லையென அவ் ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்