
சுற்றுலாப் பயணி நுவரெலியாவில் மரணம்
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
நுவரெலியாவில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வந்த 68 வயதுடைய நபர் நேற்று புதன் கிழமை திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் மாரடைப்பின் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன் மரணித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குறித்த சுற்றுலாப் பயணி தனது மனைவியுடன் கடந்த 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை நுவரெலியா சுற்றுலா பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்