சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிட திறன் பயிற்சி செயலமர்வு

 

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிட திறன் பயிற்சிச் செயலமர்வு செவ்வாயன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறுவர்கள் தங்களது உரிமைகளை அறிந்து கொண்டு தங்களைத் தாங்களே உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து சிறுவர் சபை உறுப்பினர்கள் பயனாளிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

தன்னாமுனை மியானி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மூன்று நாள் செயலமர்வின் ஆரம்ப நிகழ்விற்கு, மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

செரி நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றுவரும் இந்த செயலமவில், மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தி. மதிராஜ் செரி நிறுவனத்தின் இலங்கைக்கான தேசிய பணிப்பாளர் வீ.ஈ.தர்சன், அதன் மாகாண பணிப்பாளர் எஸ். பகீரதன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்