சிறுமிக்கு போதை மருந்து: ஒரு மாதம் பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்!
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சேம்பூர் பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சிறுமியின் குடும்பத்திற்கு அறிமுகமாகி சிறுமியுடன் அண்ணன் போல் பழகி வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில், கோடை விடுமுறை காலத்தில் சிறுமி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
அப்போது அந்த இளைஞர் சிறுமியை வீட்டுக்கு அடிக்கடி வந்து பார்த்துள்ளார். சிறுமி தனியாக இருப்பதை உணர்ந்த இளைஞர் அவருக்கு போதை மருந்துகளை கொடுத்து மயக்க நிலையில் இருக்கும் போது பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார்.
இவ்வாறு கடந்த மே 7ஆம் தேதி தொடங்கி ஜூன் 6ஆம் தேதி வரை தொடர்ச்சியாக ஒரு மாத காலம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த சில தங்க நகைகள் மற்றும் பணம் திடீரென காணமல் போனது சிறுமியின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்கு இளைஞர் அடிக்கடி வந்து செல்வதை உணர்ந்த பெற்றோர் தனது மகளை விசாரித்துள்ளனர். அப்போது தான் தனக்கு நேர்ந்த அவலத்தை அவர் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடந்த ஜூன் 6ஆம் திகதி பொலிஸாரிடம் புகார் அளித்தனர்.
மேலும், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், குற்றம் உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து இளைஞரை கைது செய்த பொலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். வீட்டில் பொருள்களை திருடி செல்போன் வாங்கியதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார். அதன் பேரில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்