சாப்பாடு ருசியில்லை என மகளின் கண்முன்னே மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்
ருசியான சாப்பாடு சமைக்கவில்லை என்ற கோபத்தில் மனைவியை கணவர் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்தியா-மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் தேவ்காட் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் வசிப்பவர் ராம் சஜீவன் கோல், இவருக்கு நவ்மி என்ற பெண்ணுடன் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.
இதேவேளை தம்பதி இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் சண்டை நடப்பது வாடிக்கையாக இருந்துள்ளது.
மதுபோதைக்கு அடிமையான ராம், குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார், உறவினர்கள் எவ்வளவோ முயன்றும் கணவன் – மனைவி பிரச்னையை தீர்த்து வைக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கணவன் ராம் வழக்கம் போல குடித்துவிட்டு போதையுடன் வீட்டிற்கு வந்துள்ளார், வந்து மனைவியை சாப்பாடு போடுமாறு கேட்டுள்ளார், அப்போது சாப்பாடு தொடர்பாக தம்பதி இருவருக்கும் சண்டை வந்துள்ளது, சாப்பாடு ருசியாக இல்லை எனக் கூறி ராம் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
இருவருக்கும் இடையே சண்டையை தடுக்க மகள் தீவிரமாக முயற்சி செய்துள்ளார். சண்டை தீவிரமாக மாறிய நிலையில், ஆத்திரத்தில் கணவர் ராம், தனது மனைவியின் கழுத்தை கூறிய ஆயுதத்தால் அறுத்து கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார், இந்த கோர சம்பவம் மகளின் கண் முன்னே நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தலைமறைவான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்