Last updated on November 2nd, 2024 at 12:32 pm

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் ஒருவர் கைது

புத்தளம் , கற்பிட்டி – வன்னிமுந்தல் பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் , கற்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கற்பிட்டி – வன்னிமுந்தல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்